பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவில் திருத்தம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, December 17th, 2022

பயிரிடப்படாத நிலங்களை அரசுடமையாக்குவதற்கான சட்டவரைவுகள் மற்றும் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பிலுள்ளவர்கள், தமது சொந்த இடங்களில் உள்ள நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாமல் உள்ளனர்.

எனவே, அந்த நிலங்களை அரசுடமையாக்கி, குறித்த பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய, சட்டவரைவுகள் மற்றும் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த போகத்தின்போது, குறிப்பிடத்தக்க அளவு நிலத்தை அரசுடமையாக்கி, இளைஞர்களுக்கு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

தற்போது வரையில், சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் வயல் நிலங்கள் பயிரிடப்படாதுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: