அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Wednesday, September 13th, 2023
எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது ருவிற்றர் கணக்கில் குறிப்பொன்றை இடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட இயக்க முறைமையில் தாக்கல் செய்வது குறித்து மேலும் விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வினைத்திறனற்ற அமைச்சு செயலாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு!
சட்டத்தின் ஆட்சியை புறக்கணித்ததால்தான் நமது நாடு சரிந்தது - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்கா...
|
|
|


