அனுமதியற்ற பெரிய செலவினத்திற்கு அரசாங்க உயர்பீடம் பொறுப்பில்லை – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, January 2nd, 2023

திறைசேரியின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் எந்தவொரு பெரிய செலவினத்திற்கும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவார்கள் என்று அரசாங்க அறிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான 500 மில்லியனுக்கும் அதிகமான மூலதனச் செலவுகளுக்கு திறைசேரியின் அனுமதியைப் பெறவேண்டும்.

இதனைப் பெறத்; தவறினால் அதிகமான தொகைகளுக்கு அமைச்சுச் செயலாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் பொறுப்பாவார்கள் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை வலியுறுத்தி, அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரியிடம் இருந்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஒதுக்கீடுகளின் வரம்பிற்குள் செலவினங்களை நிர்வகிக்க அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவதில் செயல்படுத்தப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.

இந்த ஆண்டு ஒதுக்கீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முன்னுரிமைகளை திறைசேரி பட்டியலிட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, அத்தியாவசிய நடவடிக்கைகளைப் பராமரித்தல், ஏறக்குறைய முடிக்கப்பட்ட பணிகளை முடித்தல் மற்றும் பகுதியளவு முடிக்கப்பட்ட திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

ஐந்து வீரர்களின் தகுதி நீக்க விவகாரத்தில் தலையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியது மகாஜனா!
எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்து...