ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் – தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 செப்டம்பர் 16 ம் திகதிக்கும் ஒக்டோபர் 17ம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கான உறுதியான திகதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு சட்ட கட்டமைப்புகளை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் அரசமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக பின்பற்றியே தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

தேர்தலிற்கான ஏனைய நடவடிக்கைகளிற்கான நிதியை பெறுதல் ஆவணங்களை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  2025ம் ஆண்டிலேயே பொதுத்தேர்தல் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல்களை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: