மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள வடக்கின் 4 வைத்தியசாலைகள் உள்ளிட்ட 9 வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி !

Tuesday, June 15th, 2021

மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படும், தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும், மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படுகின்ற மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளே இவ்வாறு சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

குறிப்பாக சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் எதிர்பார்பக்கப்பட்ட நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: