மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, August 3rd, 2023

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

“ஓராண்டுக்கு முன்னர் ஒரு ஸ்டிக்கரை அறிமுகம் செய்தோம். ஒரு மதுபானம் போத்தலை வாங்கும் போது இது உண்மையான சரியான தயாரிப்பு என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். ஆனால் இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக நாட்டில் பெரும் பிரச்சனை எழுந்துள்ளது. ஆனால் அதைச் செய்பவர்களுக்கு நான் சொல்கிறேன், அதனை தடுக்க இந்த வாரம்முதல் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்துவோம்.

.எனவே யாரேனும் அதனை செய்தால் கவனமாக இருங்கள் அவர்களை தடுத்து கைது செய்ய அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். கைது செய்யப்பட்டால், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:

யாழ்ப்பாண பல்கலையில் பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி இல்லை : நிலமைகளைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என ...
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் - சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முட...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை - சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிகோரும...