மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை

Monday, April 4th, 2016

திட்டமிட்டவகையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மணல் கொள்ளையினை தடுத்துநிறுத்த விரைவான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தமக்கள் பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தெளிவுபடுத்திய போதே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கிவருவதை நீங்கள் நன்கறிவீர்கள்.

இந்நிலையில் கடந்தசில மாதங்களாக மாவட்டத்தின் குறிப்பிட்ட விவசாய நிலப்பகுதிகளில் திட்டமிட்டவகையில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை இடம்பெற்றுவருகின்றது.

இதுவிடயம் தொடர்பாக பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திகுழுக் கூட்டங்களில் நாம் எடுத்துக் கூறியிருந்தபோதிலும் இணைத்தலைமை வகித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசஅதிகாரிகளும் உரியகவனம் செலுத்தவில்லை.

இந்நிலை தொடருமானால் எதிர்காலத்தில் விவசாய நிலங்களை மணல் கொள்ளையர்களிடம் இழப்பது மட்டுமன்றி விவசாயிகளாகிய நாம் எமது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் இழக்கவேண்டிய துர்ப்பாக்கியமும் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

எனவே எமது அவலநிலையினைக் கருத்தில் கொண்டு மணல் கொள்ளையினைத் தடுத்து நிறுத்தவதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தங்களைகோரிநிற்கிறோம் என்றும் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு விவசாயநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் கொள்ளையினை தடுத்துநிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் பலமுறை கோரிக்கையினை முன்வைத்த போதிலும் அவர்கள் இவ்விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றமையானது அவர்கள் மீதானவெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என கிளிநொச்சி மாவட்டமக்கள் விசனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: