மட்டகளப்பில் அனர்த்தம் – பல வீடுகள் சேதம்!
Sunday, March 26th, 2017
மட்டக்களப்பில் அரிசி களஞ்சிய அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளன.
காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை அரிசி களஞ்சிய அறை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் அந்த களஞ்சிய அறை முழுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த வெடிப்பினால் அருகில் இருந்த 2 வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்தினால் கிட்டத்தட்ட 25 இலட்சம் தேசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:
20 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் ௲ உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அரச நிகழ்வுகளை தனியார் விருந்தகங்களில் நடத்தத் தடை!
சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை - தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
|
|
|


