சிறார்களை பலிகொண்ட பாணி திரவம் இலங்கையில் இல்லை – தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, October 21st, 2022

இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் கடும் சட்டங்களுக்கு மத்தியில் தரங்கூடிய மருந்துகள் மாத்திரமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெறும் என அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இருமலுக்காக பயன்படுத்தப்பட்ட பாணி மருந்து காரணமாக கம்பியாவில் 70 சிறார்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பாணி மற்றும் திரவ மருந்துகளை அருந்திய இந்தோனேஷியாவைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்தனர்.

சில திரவ மருந்துகளில் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இராசயனப் பொருள் அடங்குகின்றமை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த ஒளடதங்களை பெற்றுக் கொண்ட 200 சிறார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதி...
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் - கல்வி அமைச்சர்...
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித்...