4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் – கல்வி அமைச்சர் விலியுறுத்து!

Wednesday, August 4th, 2021

4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளகல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வரவு – செலவு திட்டம் மூலமே தீர்வுகாண முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் 3 மாதங்களில் அடுத்த வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். ஆகையால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டங்களை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவு திட்டத்தில் இப்பிரச்சினைக்கு நியாயமான மற்றும் முழுமையான தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அரசாங்கம் நஷ்டமடைந்தாலும் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கினாலும் ஆசிரியர்களினால் மூன்று மாதங்களுக்கு காத்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையானது 4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதித்துள்ள நிலையில், அவர்கள் உடனடி தீர்வை கோரியுள்ளனர். தற்போதைய போராட்டமானது நியாமற்றது. ஆகையால் தொழிற்சங்க இதனை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொண்டுள்ளதாகவும், கடந்த வருடத்தில் இலங்கையும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் தெரிவித் அமைச்சர் கல்வி அமைச்சர் நிலைமையைக் கருத்திற்கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: