மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை நீதிபதி இளஞ்செழியன் !

Thursday, August 4th, 2016

நாடாளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை  இடம்பெறும்  சூழலில்  மாணவர்களுக்குத்  தொல்லை கொடுத்து வருகின்ற கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் பாடங்களை ஆயத்தம் செய்வதற்கு ஆலயங்களின் ஒலிபெருக்கிகள் இடையூறாக இருந்து தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகின்ற கோவில்களுக்கு  எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்துப்  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கும்படி நீதிபதி இளஞ்செழியன் யாழ். பிரதிப்  பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாமல் செயற்படுகின்ற ஒலி பெருக்கிபானையாளர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுடைய ஒலி பெருக்கி சாதனங்களும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும்போது தற்போதைய பரீட்சை முடியும் காலம் வரையில் அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு - தேர்தல்கள் ஆண...
பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்...
சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், - QR இன்றி எர...