மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து  சேவையாற்றவேண்டும் –  ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின்!

Wednesday, February 28th, 2018

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்புக்களை பெற்ற தரப்பினர் அந்தந்தப் பிரதேசங்களில் ஆட்சி அமைக்க முன்வரவேண்டும். அதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சியின் “மக்களுடன் நாம்! மக்களுக்கா நாம்!!” நிகழ்ச்சிக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கட்சி வேறுபாடுகளுக்காகவோ அன்றி அரசியல் வேறுபாடுகளுக்காகவோ நாம் அரசியலை முன்னெடுக்கவில்லை.சபைகள் மக்களுக்குரியது. அதன் அதிகாரங்களைக் கேட்டு பல கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அந்தவகையில் யார் ஆட்சி செய்தாலும் எமக்கு பிரச்சினை கிடையாது.

எம்மைப் பொறுத்தளவில் மக்களுக்கான சேவைகளைச் செய்ய சபைகள் இயங்கவேண்டும். அந்தச் சபைகளினூடான  பலாபலன்களை அந்தந்தப் பகுதி மக்கள் அனுபவிக்கவேண்டும். அதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தடையாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

முழுமையான செய்தியை பகிர்ந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

Related posts:


நாடு முழுவதும் அனைத்து மாணவரும் தலா 2 இலட்சம் ரூபாவுக்கு காப்புறுதி - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் - அ...
மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் - அமைச்சின் செயலாளர் வைத்...