யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் – நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 4th, 2021

யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்க தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் நீரியல் வள கூட்டு உடன்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலகளாவிய கற்கைப் பங்களிப்புக்களுக்காக நோர்வேயின் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் நிதி அனுரணையின் கீழ் -நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகத்தால் – கடற்றொழில், நீர் வேளாண்மை மற்றும் நீர் விஞ்ஞானம் தொடர்பான புத்தாக்க வலையமைப்பு’ எனும் பெயரிலான கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்படி கருத்திட்டத்தினுடைய எமது நாட்டின் பங்காளர்களாகச் செயற்பட – உருகுணை பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகிய நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள மேற்படி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த நிறுவனங்கள் மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகத்திற்கு இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ், நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் மற்றும் எமது நாட்டு நிறுவனங்களுக்கிடையே கூட்டு ஒத்துழைப்பின் மூலம் – இருதரப்பினருக்கும் பயன்கள் கிடைக்கும் வகையில் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்துதல், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், மற்றும் சர்வதேச புரிந்துணர்வுகளை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: