உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜானதிபதியிடம் கையளிப்பு!
Tuesday, April 6th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக் கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப் படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச் சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.
இதற்கமைய குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரி குப்த ரோஹணதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உறுதி மிக்க கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் - பிரதமர் ரணில்!
இந்திய அரசு மனிதாபிமன உதவி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங...
|
|
|


