மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என ஜனாதிபதி ஒருபோதும் கூறியிருக்கவில்லை – அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவிப்பு!
Wednesday, October 13th, 2021
மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற தவறிவிட்டார் என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை தன்னாலும் அமைச்சரவையாலும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றே ஜனாதிபதி தெரிவித்தார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர ஜனாதிபதியின் உரைக்கு வேறு அர்த்தம் கற்பிப்பது நியாயமற்ற விடயம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளும் ஆனால் குறைபாடுகளை அடிப்படையாக வைத்து அரசாங்கத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என கருதக்கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமரை அழைக்க திட்டமிடும் ஜனாதிபதி ஆணைக்குழு!
'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது - பாதுகாப்பு இ...
குருதிப் புற்றுநோய் - சிகிச்சை பயனின்றி சிறுவன் உயிரிழப்பு!
|
|
|


