மகிந்தவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை – மார்ச் மாதத்தின் பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம்முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக கூட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, குழப்பம் அடையாமல் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அரச தலைவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு விடுத்த கோரிக்கையை அரச தலைவர் ஏற்றுக்கொண்டதுடன், அடுத்ததடுத்து இரண்டு தேர்தல்களுக்கு தயாராகுமாறும் அரச தலைவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 69 மில்லியன் மக்களின் ஆதரரவு கொண்ட பொதுஜன பெரமுன கட்சியில் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு பதிலாக வேறு ஒரு கட்சியை சேர்ந்தவரை பிரதமரை நியமித்தமைக்கு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை விருப்பத்துடன் பதவி நீக்கம் செய்யவில்லை என்றும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

அத்துடன் குறித்த காலம்வரை பொறுமையான செயற்பட்டு எந்த ஒரு தேர்தலையும் பெற்ற கூடிய வகையில் பொதுஜன பெரமுனவை கிராமிய மட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும். இதேநேரம் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வைத்து செய்த தவறு சரி செய்யப்படும் எனவும் அரச தலைவர் மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: