அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு -‘நானே அதிக அளவில் வென்றேன்’என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!

Sunday, November 8th, 2020

ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் 290 ஆசனங்களை கைப்பற்றியுள்ளார். அதேநேரம் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் 214 ஆசனங்களை பெற்றுள்ளார் .

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வெளியான போது , இந்த தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சுமத்தினார்

இதற்கமைய, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் குழுவில் 20 ஆசனங்களைக் கொண்ட பென்சில்வேனியா, 15 ஆசனங்களைக் கொண்ட வடக்கு கரோலினா உள்ளிட்ட இறுதி 6 மாநிலங்களின் முடிவுகள் வெளியிடப்படுவதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரசார குழு முன்வைத்த கோரிக்கையை, அந்த மாநில நீதிமன்றம் நிராகரித்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்களின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, குடியரசு கட்சியினர், மட்டுமின்றி ஜனநாயக கட்சியினரும் வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் பகுதிக்குள் செல்லவில்லை என்று குறிப்பிட்டதுடன், அந்தக் கோரிகையையும் நிராகரித்தார்

அதன்பின் தொடர்ந்தும் வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது இதற்கமைய, 270 என்ற ஆசன எண்ணிக்கைய பெற்றால் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகலாம் என்ற அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் படி, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் 290 ஆசனங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளார்.

78 வயதான ஜோசப் ராபினெட் பைடன் ஜூனியர் அமெரிக்க நடப்பு ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்பைத் தோற்கடித்ததை அடுத்து, 2021 ஜனவரியில் அந்த நாட்டின் 46-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்பார். இவர் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47ஆவது துணை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

இவர் 1973 முதல் 2009 வரை அமெரிக்க மேலவையில் டெலவெயர் தொகுதியை பிரதி நிதித்துவப்படுத்தினார்.

அதேநேரம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட கமலாதேவி ஹரீஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகும் முதலாவது தமிழ் பின்புலம் கொண்டவராக அவர் உள்ளார்.

2017ம் ஆண்டு கலமாதேவி ஹரிஷ் கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க மேலவையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் 90களில் இருந்து சட்டத்துறையில் பல்வேறு உயர் நிலை பதவிகளை வகித்து வந்துள்ளார். கமலாவின் தாயார் மருத்துவர் சியாமளா கோபாலன் – ஒரு தமிழர் – புற்றுநோய் வல்லுநர் ஆவார், அவர் சென்னையிலிருந்து 1960-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு புலம்பெயர்தார்.

கமலாவினுடைய தந்தை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் – ஜமைக்காவைச் சேர்ந்தவர், அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியாக பணி புரிந்தார்.

கமலா தேவி, அமெரிக்க ஜனாதிபதி டொனலாட் ட்றம்ப் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக குற்றபத்திரிகை கொண்டுவரப்பட வேண்டும் என்ற விவாதத்தை ஆரம்பித்தவர் என்ற நிலையில் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: