நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ நடவடிக்கை – அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு குழுவாக செயற்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 25th, 2023

தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர், ஆரம்பமாகும் பாடசாலை தவணையின் போது இவர்கள் பாடசாலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

” இந்த ஆசிரியர்கள் தற்போது மாகாண மட்டத்தில் மாதாந்த பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

கஷ்டப்புற பாடசாலைகளில் தற்போது கடமையாற்றும் அதிபர்களுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிர்வாகத்தில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் பூரணப்படுத்தப்படும். கல்வி நிர்வாகத்தில் 808 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தற்போது பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 404 பேருக்கு மிக விரைவில் நியமனங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதனூடாக அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு குழுவாக செயற்படும் . ” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: