பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவடிக்கை பிரதமரால் முன்னெடுப்பு!

Friday, July 2nd, 2021

பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை பலப்படுத்தி குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவுத்துறை மற்றும் சிவில் கடமைகள் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் செயற்பாட்டிற்கு தேவையான 2 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை இலங்கை பொலிசாருக்கு குறியீட்டு ரீதியாக வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வலுவான போக்குவரத்து அமைப்பு காணப்பட வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இதன்போது குறியீட்டு ரீதியாக சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

முச்சக்கர வண்டிகளை குறித்த பொலிஸ் நிலையங்களின் குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை, பல்வேறு முறைபாடுகளை விசாரித்தல், 119 அவசர அழைப்புகளுக்காக ஈடுபடுத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தல், உளவுத்துறை பணிகள் மற்றும் சிவில் கடமைகளுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களை விரைவில் அணுகும் வசதிக்கமைய பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தி பிரஜா பொலிஸ் எண்ணக்கருவை மேம்படுத்தும் நடவடிக்கையும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்படும்.

வரி கட்டணமின்றி கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த முச்சக்கர வண்டிகளுக்காக அரசாங்கம் 829 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாளை காலை 5 மணிக்கு நாட்டின் பல பாகங்களில் தளர்கிறது ஊரடங்குச் சட்டம் – அனைத்து வகையான நிகழ்வுகளும் ...
தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா - பாதுகாப்பு செ...
சவால்கள் வருகின்றன - அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ த...