நாளை காலை 5 மணிக்கு நாட்டின் பல பாகங்களில் தளர்கிறது ஊரடங்குச் சட்டம் – அனைத்து வகையான நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை தடை – அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் நடவடிக்கை என அரசாங்கம் எச்சரிக்கை!

Sunday, April 19th, 2020

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் மேலும், அனைத்து வகையான திருவிழாக்கள், யாத்திரை, சுற்றுலாக்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை மீள அறிவிக்கும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்துடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் ஐம்பது சதவீதமானோர் கடமைக்கு திரும்ப வேண்டும் என்பதுடன் ஏனையவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்பதோடு யாரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நிறுவன உயரதிகாரியிடமே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பது அந்த நிறுவன உயரதிகாரியின் பொறுப்பாகும். அதேபோல் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும் எனள்பதுடன் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் என்றுமு; வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பொது நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டை முன்னெடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றையும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், துறைசார் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கூட்டுதாபன தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொது முகாமையாளர்களுக்காகவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கான வழிமுறையாகவும், மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை தடுக்கவும், வீட்டிலிருந்து தங்கள் கடமைகளைச் செய்யவும் நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு நிறுவனங்களும் சமூக தூரம், முகம் கழுவுதல், கை கழுவுதல் மற்றும் பிற சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதேபோல் சேவை பெற வரும் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது..

மேலும் மக்கள் கூட்டமாக கூடுவதால் அது வைரஸ் பரவலை தடுக்க தடையாக இருக்கும் என கருதி அனைத்து மத விழாக்களுக்கும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதியின் ஊடக பிரிவு அனைவரையும் அனைத்து சுகாதார விதிமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும், பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது பணிகளுக்காக வெளியில் செல்லுமாறும் அதனை தவிர வேறு தேவைக்காக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் முடியுமான வரை வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகும், சுகாதார அதிகாரிகள் அளித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

Related posts:

முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து யாழில் திரண்ட போட்டிப் பரீட...
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தும் செயலை செய்கிறது வடக்கு மாகாணசபை - ஈ.பி.டி.பியின் வடக்க...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!