சவால்கள் வருகின்றன – அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022

பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் வீழ்ச்சியடைந்த கஸ்டத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு அரசாங்கத்தையே நாம் பொறுப்பேற்றோம் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னைய அரசாங்கம் சரியான நேரத்தில் கொள்கை முடிவுகளை எடுக்காத காரணத்தினால் இன்றும் எமது மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு குளம் கட்டாத, ஒரு நீர்ப்பாசன திட்டத்தையும் செயல்படுத்தாதவர்களே இன்று விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இன்றைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான் ஒரு கிலோ நெல் ரூ.40க்கு கொண்டு வரப்பட்டது. விவசாய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவர் உழைத்திருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நெற்பயிர்களை பயிரிட வேண்டாம் என்று கூறியது. இன்று ஒரு குளத்தை சீரமைக்க தொடங்கியவுடன் என்ன சொல்கிறார்கள். புதையல் தோண்டவோ, மண்ணைத் தோண்டவோ, மணலைத் தோண்டவோ முயற்சிப்பதாக கூறுகின்றனர். மரியாதையே இல்லை. விவசாய சமூகத்திற்காக நிற்பதாக காட்டி விவசாய சமூகத்தின் வளர்ச்சியை நிறுத்த நினைக்கிறார்கள்.

கொவிட் தொற்றிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்ட போது  அவர்கள் மக்களை வீதிக்கு இறக்கினார்கள். ஜனாதிபதியையும் பிரதமரையும் அவமதிக்கிறார். அரசு அவமதிக்கப்படுகிறது. பணிபுரியும் அதிகாரிகள் அவமதிக்கப்படுகிறார்கள்.

பணிபுரியும் அதிகாரிகள் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். இன்று உங்கள் அழுத்தத்தை அறியாத ஜனாதிபதியோ பிரதமரோ இந்த அரசாங்கத்தில் இல்லை. சவால்கள் வருகின்றன. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: