மாலபே இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் அபிவிருத்தி!

Friday, May 19th, 2017

மாலபேயில் செயற்பட்டு வரும் இலங்கை தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை முதலிட்டாளர்களைக் கவர்ந்து வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது தொழில்நுட்பம், வர்த்தகம், பொறியியல் துறைகளுக்கான பட்டங்களை வழங்கும் முக்கிய நிறுவனமாக இது செயற்பட்டு வருகின்றது. இதுவரையில் 9 ஆயிரம் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

மகாபொல நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதனைக் கவனத்திற்கொண்டு பட்டமளிக்கும் கல்வி நிறுவனமாக இதனை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

Related posts: