பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிராமமான முறையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.நாட்டு மக்களுக்கு காத்திரமான சேவையை வழங்க பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - நீதி அமைச்சர் தகவல்!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர்!
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை தெர...
|
|