கடந்த ஆண்டு வீதி விபத்துக்களால் 3153 பேர் பலி!

Saturday, November 17th, 2018

வீதி விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தேவைப்படுவதாக சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் விபத்து தடுப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதிக வேகம், மது அருந்துதல், நித்திரை கலக்கம், வீதி விதிகளை மீறியவாறு வாகனம் செலுத்துதல் மற்றும் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்துதல் என்பன காரணமாக பெரும்பாலான வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் இளம் தலைமுறையினரே அதிகளவில் மரணிக்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு செய்யும் இளைஞர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, சிறுசிறு விடயங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பதன் ஊடாக வீதி விபத்துக்களை குறைத்துக்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வீதி விபத்துக்களால் கடந்த வருடம் 3 ஆயிரத்து 153 பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 8 எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related posts:

27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...
“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! - அனைத்து அதிபர்களுக்கும...