நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Monday, February 19th, 2024
தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் (Gigawatts ) வரை அதிகரித்துள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பிரியந்த கருத்துத் தெரிவிக்கையில் ”இந்நாட்களில் நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளது.
அந்தவகையில் நாட்டில் தற்போது சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரமும், காற்றாலை மூலம் 5 வீத மின்சாரமும், அனல் மின் உற்பத்தி மூலம் 64 வீத மின்சாரமும் பெறப்படுகின்றது. எனவே மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு கிடையாது - பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் - ஜனாதிபதி ரணில்...
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி - நாடு முழுவதும் உள்ள தேவா...
|
|
|


