பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Sunday, August 8th, 2021

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துகின்றன. எமது நாட்டிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குறித்த பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இடம்பெற்றதாகவும் இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டில் தற்போது அதிகரித்தவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தள்ள ஜனாதிபதி இதற்கு தேவையான அளவைப் பெற உடனடியாக கோரிக்கை விடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி கொடுக்க விரும்பினால் விரைவில் விண்ணப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை நாட்டில் 93 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: