இலங்கையின் அருமை ஒரு சிலருக்கே தெரியும் – அமைச்சர் பவித்ரா சுட்டிக்காட்டு!.

Sunday, May 7th, 2023

உலகில் மிகச் சிலரே எமது நாட்டை நன்கு அறிவர் என சுட்டிக்காட்டியுள்ள வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இந்நாட்டின் அருமையை மிகக் குறைவானவர்களே அறிவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் குளிர் காலநிலையால் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர், ஆனால் இலங்கை மக்கள் அவ்வாறான நிலைமைகள் இன்றி வாழும் பாக்கியம் பெற்றுள்ளனர் என்பதுடன், குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரித்தலையில் வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமொன்றின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில் –

நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புடன் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோன்று வனவிலங்கு வளங்களை பயன்படுத்தி அதிகளவான அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பவித்ரா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சராகப் பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பல உள்ளகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தாம் உழைத்ததாகவும், அந்த அதிகாரிகள் தமது கடமைகளை திருப்திகரமாகச் செய்யாவிட்டால் நிறுவனத்தை நடத்த முடியாது எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்தவகையில் இந்த நிறுவனத்தை பராமரிப்பது அனைவரின் பொறுப்பு என்றும், இந்த நிறுவனத்தை பராமரிக்க திணைக்கள அதிகாரிகள் கொஞ்சம் பணம் வசூலித்து வெளியாட்களுக்கு வழங்கினால் தினசரி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: