நூறு ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிட யோசனை -அமைச்சர் ராஜித சேனாரட்ன?

Friday, June 29th, 2018

முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் 100 ஏக்கர் காணியில் கஞ்சா பயிரிடுவது குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்:

கஞ்சா பயிரிடுவது குறித்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அனுமதி கோரி அமைச்சரவையில் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் கஞ்சா தொடர்பில் பிறப்பித்திருந்த தடையை நீக்கியுள்ளது. கஞ்சாவை மருந்தாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நரம்பியல் பிரச்சினைகளுக்கு கஞ்சா மிகச் சிறந்த மருந்தாகும்.

இலங்கையில் கஞ்சாவைப் பிரித்தானிய ஆட்சியாளர்கள் தடை செய்திருந்தனர். போதைப்பொருளாக கஞ்சாவைப் பயன்படுத்துவது பிரச்சினையானதுதான்.

எனினும் மருந்துப் பொருளாகக் கஞ்சாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது அபின் இலங்கையில் இருக்கவில்லை. எனது தலையீட்டின் கீழ் இந்தியாவிலிருந்து அபின் இறக்குமதி செய்யப்பட்டது.

கஞ்சா பயிரிடுவதன் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும். முப்படையினரின் மேற்பார்வையின் கீழ் கஞ்சா பயிரிடுவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Related posts: