பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!
Thursday, May 27th, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை கண்காணிப்பதற்காக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் போலீசாரையும் உள்ளடக்கிய போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சில் ஸ்தம்பிதம் - சீனா!
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!
இராணுவத்தினருக்கு செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது தடை - இராணுவ தலைமையகம் ஆலோசனை!
|
|
|


