பேச்சுக்கள் தோல்வி  வேலைநிறுத்தம் தொடர்கின்றது!

Thursday, August 4th, 2016

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இன்று மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி முதல் இவர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது இன்று 9ஆவது நாளாகவும் தொடரவுள்ளதாக பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தமது கோரிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள ஆணைக்குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலே தோல்வியடைந்துள்ளதாகவும், இதனால் போராட்டம் தொடர்வதாகவும் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் தலைவர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.

குறித்த மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தமது வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கோரிய போதும் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானவர்கள் தொழிலாளர்களே - மே தின செய்தியில் அரச தலைவர் தெரிவிப்ப...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மட்டும் பிரச்சினை அல்ல - நாடாளுமன்றத்தை எவ்வாறு...
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டும் அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு - சட்டங்களைத் தி...