இளைஞர்களின் தொழிலின்மையை நிறைவு செய்ய இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Friday, July 2nd, 2021

இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பொது நிர்வாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரின் You Lead திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு இலவசமாக NVQ-3 தொழிற்தகைமையை வழங்க துரித திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

45 ஆயிரம் மின்னியலாளர்களுக்கு தொழில்முறை தகுதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் USAID இன் இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் திட்டமான You Lead உடன் 28 ஆம் திகதி இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மின்சாரத்துறையில் இலங்கை இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துனர் என்ற வகையில் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் மிக பாரிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் இளம் மின்னியலாளர்கள் எவ்வித செலவுமின்றி தொழில்முறை தகுதியை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்.ஜனக ரத்நாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 45 ஆயிரம் மின்னியலாளர்கள் காணப்படுகின்றனர் என்றும் அவர்களில் 80 வீதமானோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதி இல்லை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு பாரியதொரு தடையாகும்.

அத்துடன் மின்னியலார்களுக்கான உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதியாக NVQ-3 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதனை பெற்றுக் கொள்வது அத்தியவசியமாகும். ஆனால் தங்களது வருமானத்தை கருத்திற்கொண்டு பலர் பாரிய தொகையை முதலீடு செய்து நீண்ட கால கற்கைநெறிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் தொழிற் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக மூன்றே தினங்களில் மின்னியலாளர்களுக்கு NVQ-3 சான்றிதழை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts: