33 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலை நினைவேந்தல் நாள் இன்று!
Tuesday, May 15th, 2018
குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த போது இலங்கை கடற்படையினரால் ஈவிரக்கமின்றி 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் படிந்த 33 ஆவது நினைவு நாள் இன்று.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமைபோல ஆரம்பித்தது. குமுதினிப்படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு இந்த கோர கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்ட துயரம் நிறைந்த நாள் இன்று.
இந் நினைவு நாளை நெடுந்தீவின் மக்கள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியொன்றை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
மிளகாயை சந்தைப்படுத்தாது விதைகளைப் பெற நடவடிக்கை - மாவட்ட விவசாயப்பிரிவு!
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
|
|
|




