தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Wednesday, December 21st, 2016

யுத்தத்தால் அழிவுற்றுக்கிடந்த எமது தேசத்தின் கல்வி வளத்தை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினரை ஒரு நிறைவான ஆற்றலுள்ள கல்வியியலாளர்களாக உருவாக்குவதற்கு அயராது உழைத்த பெருமை எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையே சாரும். இதை வேறெந்த  தரப்பினரும் உரிமை கோரவும் முடியாது என  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான முருகேசு வசீகரன் அவர்களது பங்களிப்புடன் இன்றையதினம் நல்லூர் பிரதேசத்திற்குட்பட்ட வறிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

கடந்த காலத்தில் குடாநாட்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட பிரச்சினைகளை தனது சாணக்கிய அரசியல் நகர்வுகளூடாக அணுகி மத்திய அரசிடமிருந்து எமது மாணவர்களுக்காகு  பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலைமை இன்று இல்லாது போனதன் விளைவாக  வடபகுதி மாணவர்களது செயற்பாடுகளும் கல்வித்தராதரங்களும் மாற்றம் கண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

DSCF0218

எமது மக்களின் தேவைகளை முன்னிறுத்தாது தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக மட்டும் அரசியல் செய்யும் போலி அரசியல்வாதிகளது பொய்முகங்கள் இன்று மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்தகாலங்களில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தன்னிடம் இருந்த சிறு அரசியல் பலத்தை கொண்டு எந்த ஒரு தரப்பாலும் சாதித்துகாட்டமுடியாத பெரும் பணிகளை குடாநாட்டுக்கு செய்துள்ளார். இத்தகைய பணிகள் மேலும் அதிகளவில் தொடர்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து தமது பலத்தை அவரிடம் கொடுப்பார்களானால் நிச்சயம் வளமான ஒரு வாழ்வை அவர் எமது தமிழ் மக்களுக்காக பெற்று தருவார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா ,நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

DSCF0205

Related posts: