போலி கல்விச்  சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? – யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!

Monday, October 15th, 2018

யாழ். பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைக்கு மோசடியான ஒருமுறையில் விரிவுரையாளர் ஒருவரை தெரிவு செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலாநிதிப் பட்டத்தையும், பி.ஏ பட்டத்தையும் ஒரே ஆண்டில் பெற்ற ஒருவரை விரிவுரையாளராக பணிக்கு அமர்த்த முயற்சிப்பது பல்கலைக்கழக சட்டத்திட்டத்தின்படி ஊழல் சார்ந்தது என்றும் கூறப்படுகிறது.

யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தமிழ் விரிவுரையாளருக்கான இடைவெளி கடந்த பத்தாண்டுகளாக காணப்பட்டு வந்துள்ளது.

இந்த இடத்திற்கான விரிவுரையாளரை தெரிவு செய்யாமல் காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியானவர்கள் பணிக்கு அமர்த்தாமல் இழுத்தப்பட்டிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

2008ஆம் ஆண்டில் விவசாய விஞ்ஞானத்தில் இளமானிப் பட்டம் பெற்றுவிட்டு, அதே ஆண்டில் தபால் வழியாக இந்தியாவில் தமிழ் பட்டத்தையும் பெற்றள்ளதுடன், கலாநிதிப் பட்டத்தையும் பெற்றிருக்கும் ஒருவரையே விரிவுரையாளராக்க நிர்வாகம் முயற்சித்து வருகின்றது.

ஆனால் இது உரிய கால ஒழுங்குப்படி கற்கைகளை பின்பற்றாத குழப்பான, கல்வி முறைமைக்கு மாறான செயற்பாடாகும்.

இத்தகைய ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவரை பணிக்கு அமர்த்த யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள ஒருசிலர் முயற்சிப்பாகதாகவும், அங்கு பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு அந்நபர் உறவினராக காணப்படுவதே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முறையாக நான்கு ஆண்டுகள் தமிழ் சிறப்பு கற்கையை நிறைவு செய்ததுடன், முறையான கற்கை முறைப்படி கலாநிதிப்பட்டம் வரையிலான மேற்படிப்புக்களை நிறைவு செய்தவர்களுக்கு விரிவுரையாளர் பணி மறுக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். பல்கலைக்கழக வட்டாரத்தை சேர்ந்தவர்களும் தமிழ்த்துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கூறுகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை போன்ற சில துறைகள் 2000ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலில் உலகளவில் பேசப்படும் நிறுவனங்களாக விளங்கிய நிலையில், தற்போது இத்துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பாக பல்வேறு நபர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: