இராணுவத்தினருக்கு செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது தடை – இராணுவ தலைமையகம் ஆலோசனை!

Saturday, February 5th, 2022

இராணுவத்தினர் செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது சம்பந்தமாக புதிய ஆலோசனைகளை இராணுவ தலைமையகம் வெளியிட்டள்ளது.

இராணுவத்தினர் பயன்படுத்தும் தொலைபேசிகளில் பதிவு செய்யும் செயலி வசதிகள் இருந்தால், அதனை அழித்து விட வேண்டும் அல்லது பயன்படுத்தக் கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இராணுவ தலைமை அதிகாரிகள் தேடி அறிய வேண்டும் எனவும் இராணுவ வீரர்களில் எவராவது இந்த ஆலோசனையை பின்பற்றாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிகாரிகள் ஏற்க வேண்டும்.

தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்படுவதன் மூலம் இராணுவ இரகசியங்கள் வெளியில் கசியலாம். இதன் காரணமாக இராணுவ தளபதியின் உத்தரவின் பேரில் பிரதான கட்டளை அதிகாரியின் ஊடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் சில உணர்வுபூர்வமான தகவல்கள் வெளியில் கசிவது இராணுவ இரகசியங்களுக்கு மாத்திரமல்லாது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலோசனைகளை பின்பற்றாத இராணுவத்தினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: