திங்கள்முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளைகள் மீள ஆரம்பிக்கப்படும் – கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி!

Sunday, July 19th, 2020

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு நகர சபை எல்லையில் பரவலாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் PCR பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி, வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதனால் வட கொழும்பு பிரதேசத்தில் இடம்பெறவிருந்த பரிசோதனைகளை பிற்போட நேரிட்டுள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இன்று சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் திங்கட்கிழமைமுதல் பி.சீஆர் பரிசோதனைகளை ஆரம்பிக்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: