நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!
Tuesday, July 18th, 2023
நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டணங்களில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், கல்வி நிலையங்கள், மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு முறைக்கு, குறைந்த தாக்கம் ஏற்படும் வகையில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கு, இவ்வாறு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நாளை கூடவுள்ள ஆலோசனை குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வாக்காளர் பதிவு சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஏற்படையது!
தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் - தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!
நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!
|
|
|


