இலங்கை வருகின்றார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் – இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, December 13th, 2023

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஓகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தில் இருநாட்டு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பரந்தப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

அத்துடன், சிங்கப்பூருடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

இதேவேளை, சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. என்றாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திட இருநாட்டு இராஜதந்திரிகளும் பல கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். விரைவில் இதற்கான உடன்பாடுகள் எட்டப்படும் என அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை விஜயத்தில் இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: