பொதுமக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களையும் இரத்து – அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானம் !
Wednesday, October 21st, 2020
தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் பொதுமக்கள் தினம் உட்பட அனைத்து கூட்டங்களையும் இரத்து செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக தன்னுடைய சேவை பெறுனர்களுக்காக புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்ய குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் அரசாங்க சேவை ஆணைக்குழுவில் கோரிக்கையை முன்வைக்கும் போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்வதன் ஊடாக தொலைபேசி இலக்கத்திற்கு விஷேட இலக்கம் ஒன்றை குறுஞ் செய்தி ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
PSC <இடைவெளி> விஷேட இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு 0704364462 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பவதன் ஊடாக கோரிக்கை தொடர்பான தற்போதைய நிலமையை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது www.psc.gov.lk என்ற இணையதளத்தில் விஷேட இலக்கத்தை பதிவு செய்து தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது.
இவையிரண்டையும் மேற்கொள்ள முடியாதுவிடின் 011 -2136600 என்ற பொதுவான இலக்கத்திற்கோ அல்லது 011 – 2136603 என்ற மேலதிக செயலாளரது இலக்கத்திற்கோ அல்லது 011 – 2136617 என்ற செயலாளரது இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன் விஷேட அழைப்பு இருந்தால் மட்டும் அலுவலகங்களுக்கு வருமாறும் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


