பொதுப் போக்குவரத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டது – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கவலை!

Tuesday, November 30th, 2021

பொதுப்போக்குவரத்தில் தற்போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் மோசமாகிவிட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் பொதுபோக்குவரத்து சேவையில் அமர்ந்து பயணிப்பதை விட அதிக பயணிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடைமுறை தொடர்ந்தால், நாட்டில் மிக விரைவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க ஓர் உறுதியான வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ள அவர் பயணிகளை உள்வாங்குதல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பயணிகள் போக்குவரத்து அமைப்பை அறிவுறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு நடைமுறைப்படுத்தாதுவிடின் நாடு நிச்சயமாக மற்றுமொரு முடக்கலுக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: