கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, November 6th, 2020

கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் Antigen பரிசோதனை தொகுதிகள் ஆய்வுக்கூடத்தில் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் Antigen பரிசோதனைத் தொகுதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வுக்கூடம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனூடாக Antigen சோதனையினூடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை விரைவாக அடையாளம் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் - உலக நாடுகளுக்கு சுகாதார ஸ்தாபனம் வலியுற...
புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவ...
இலங்கையின் அரசகரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலேயே ஆரம்ப கல்வியை வழங்க வேண்டும் - அமைச்ச...