பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று !

Monday, June 8th, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியை நியமிப்பது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று பிற்பகல் இடம்பறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் கடந்த 2 ஆம் திகதி; உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, பொதுத் தேர்தலை எந்த தினத்தில் நடத்துவது என்பது குறித்த அறிவிப்பானது கடந்த 3 ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிவிப்பானது அன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில்,  பொதுத்தேர்தலுக்கான புதிய திகதியினை இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் நாளை மறுதினம் சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு தேர்தல் நடத்துவது என்பது  குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாளைய தினத்திற்குள் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார் தற்போது 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குசீட்டுகள் அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: