கொரோனா வைரஸின் புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 1st, 2021

கொரோனா வைரஸின் A.30 என்ற புதிய வகை பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, ஏனைய நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளும்  குறுகிய காலத்திற்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

அதேபோல, இந்த புதிய மாறுபாடும் நாட்டில் எந்த நேரத்திலும் அடையாளம் காணப்படலாமென அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: