அரிப்புக்குள்ளாகும் தென்கடல் ஆபத்தில் மன்னார் தீவு!

Saturday, June 9th, 2018

மன்னார் சௌத்பார் கடற்கரையானது அதிகமான காற்று மற்றும் கடலலை காரணமாக பாரியளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் சௌத்பார் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட  சௌத்பார் தொடக்கம் கீரி வரையான தென்கடல் பகுதியானது கடந்த சில மாதங்களாக வீசி வருகின்ற அதீத காற்று காரணமாகவும் பாரிய அளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.

இவ் அரிப்பு காரணமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு கீழ் பகுதியில் காணப்படும் வற்று கடல் என அழைக்கப்படும் சிறு கடலானது பெருங்கடலுடன் இணையும் ஆபத்துக் காணப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பகுதிக்குள் கடல்நீர் செல்வதுடன் ஒட்டுமொத்த மன்னார் தீவுக்கும் பாரிய அளவிலான ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. குறிப்பாக சிறு கடல் மற்றும் பெருங்கடலை இணைக்கும் ஆற்றுவாய் பகுதியும் பெரிய அளவில் அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாகவும் கடல் நீரானது குடியிருப்பு பகுதிக்குள் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. வழமையாக மே மாதம் தொடங்கி சில காலப்பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்படுவது சாதாரணம் எனவும் ஆனால் இவ்வருடம் வழமையை விட அதிகமாக கடல் அரிக்கப்படுவதாகவும் எனவே முற்றிலுமாக கடல் அரிக்கப்பட்டு கடல் நீர் கிராமங்களுக்குள் வருவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்று நடவடிக்கைகளோ அல்லது கடல் அரிப்பை நிறுத்தக் கூடிய மாற்று வழிகளை ஆராய்ந்து செயற்படுத்துமாறு குறிப்பிட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: