ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கோரிக்கை நிறைவேற்றம் – திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்தில்மாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து!

Sunday, June 10th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்திலான வடிசாலையாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது தொடரடபில் தெரியவருவதாவது –

வடமராட்சி திக்கம் வடிசாலை பல வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்படுகின்றது. குறித்த வடிசாலையை சர்வதேச தரத்தில் நவீன ரகமாக மீள் புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சித்திரை மாதம் கொழும்பில் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் அவரது செயலாளர் ஆகியோரை சந்தித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழு ஒன்று கோரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்தே குறித்த வடிசாலையை பனை அபிவிருத்திச்சபை தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

குறித்த வடிசாலையை மீள் இயக்குவதற்கு இரண்டு வருட கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதுடன் முதல் ஒரு வருடத்தில் கட்டட நிர்மாணம் மற்றும் உபகரணங்கள் பொருத்துதல் போன்ற செயற்பாடுகளும் இரண்டாம் வருடம் சர்வதேச தரத்தில் சாராய உற்பத்தியை மேற்கொள்வதுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இயற்கையான பானத்தை விற்பனை செய்வதற்குமான இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: