பேருந்து விபத்தில் சிக்கிய 35 பெண்கள் மருத்துவமனையில்!
Tuesday, April 3rd, 2018
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு – ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியதால் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 40 பெண் பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் காயமடைந்த பெண்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
சரியான பாதையில் அரசாங்கம் - நிதி அமைச்சர்!
வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிரு...
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி - சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசி...
|
|
|


