தொழிலாளர் அமைப்புக்கு மருத்துவர் சங்கம் முறைப்பாடு!

Thursday, May 11th, 2017

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மருத்துவர் சங்கத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆற்றிய உரை தொடர்பில் அந்தச் சங்கம் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்புக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருப்பதுடன் இது தொடர்பான விசாரணை ஒன்றுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் இலங்கைப் பணிப்பாளர் சிம்ரின் சிங்குக்கு இலங்கை மருத்துவர் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை அரச மருத்துவர்கள் சங்கத்தில் சுமார் 28 ஆயிரம் மருத்துவர்கள் அங்கம் வகிக்கின்றனர். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்த எங்களுக்குப் பூரண உரிமையுண்டு. எனினும் சுகாதார அமைச்சர் இனிமேல் எங்களது போராட்டங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என பகிரங்கக் கூட்டத்தில் கூறியிருக்கின்றார். பன்னாட்டுத் தொழிலாளர் இவ்வாறு பேசியிருப்பது தொழிற்சங்க உரிமைகளை நசுக்குவதற்கு சமமாகும்.

சகாதார அமைச்சரின் இந்தப் பேச்சு பற்றிய விசாரணையொன்று தங்கள் அமைப்பால் நடத்தப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம். என்று அந்த கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: