குடாநாட்டுக்கு வெளியிடங்களிலிருந்து வந்தால் கிராம உத்தியோகத்தர் பதிவு அவசியம்!

Friday, October 30th, 2020

யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் தமது பகுதி கிராமசேவகரிடம் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் –
திருமணம் வீட்டில் நடத்த 50 பேர் அனுமதி வழங்கப்படும். அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் 25 பேருக்கு அனுமதி விங்கப்பட்டுள்ளதுடன் 2 தொடக்கம் 3 நாள்களில் நிறைவுறுத்த வேண்டும் அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து கலந்தைகொள்ள வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல நடைபாதை வியாபாரத்தில் மரக்கறி வியாபரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கத் தடை, திறந்த சந்தைக்கு அனுமதி இல்லை, விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்கவேண்டும், மக்கள் கூட்டங்களை, பொது நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டும், பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிக்களுக்கு அனுமதி, உணவங்களில் இருந்து உணவு உண்பதற்குத் தடை பொதிக்கு மட்டும் அனுமதி, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் கிராம அலுவலகர் ஊடாக பதிய வேண்டும், தொழிற்சாலைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து தொழில் புரிவோர், முடக்கப்பட பகுதிகளில் இருந்து வருகை தந்து பணிபுரிவோருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் திரட்டு செய்யப்படவேண்டும். முடக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்ல தடை, முடக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளே குடும்பத்தில் ஒருவர் மட்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லலாம். அவசர தொலைபேசி உதவி இலக்கமாக 021 222 5000 செற்படும். அவசர நிலை கருதி ஒருங்கிணைத்த செயலகமாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் 7 நாள்களும் செயற்படும். ஆலயங்களில் மதகுருமார்களுக்கு மட்டும் அனுமதி, ஆலயங்களில் அன்ன தானங்களுக்கு தடை பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கான நேர்முக பரீட்சைக்கு கட்டுபாடுகளை கல்வி திணைக்களம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: