பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்!
Monday, October 11th, 2021
1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் நீண்ட கால உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் இரு நாடுகளிலும் அதன் பிரதிநிதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஞ்ஞானவியல் தாதிப் பட்டம்: சுகாதார அமைச்சு தீர்மானம்!
இலங்கைக் கடற்பரப்பிலிருந்து இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு!
நிலைமையைக் கட்டுப்படுத்துவதும், நாட்டை ஸ்திரப்படுத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் அதிகபட்ச கடமைய...
|
|
|
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 107 பேர் பலி : 100,000 பேர் பாதிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம்முதல் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மா...


