விஞ்ஞானவியல் தாதிப் பட்டம்: சுகாதார அமைச்சு தீர்மானம்!

Monday, November 13th, 2017

தாதி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு கற்கை நெறிப் பயிற்சிக்காக விஞ்ஞானவியல் தாதிப் பட்டதாரிகளைச் சேர்க்க சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்தியத்தறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பல்கலைக்கழக மானியங்கள் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானவியல் தாதியர் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பம் தொடர்பான விபரங்கள் யாவும் கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி விண்ணப்பத் திகதி முடிவடையவுள்ளது.இதற்கான தெரிவுகள் யாவும் நேர்முகப் பரீட்சை மூலம் இடம்பெற்றவுள்ள நிலையில், தகுதியானவர்கள் என தெரிவு செய்யப்படுபவர்கள் 6 மாத கால ஆங்கில மொழி மூல பயிற்சியில் கலந்துகொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: